
ஏனோ தெரியவில்லை...!
ஏதாவது எழுதவேண்டும்
போல் இருந்தது.
கண்ணை மூடிச்
சிந்தித்தேன்...!
விண்ணைக் கூர்ந்தும்
சிந்திதேன்...!
என்னைக் கொண்டு
முடியுமான வரை
எண்ணிப்பார்த்தேன்...!
கார் இருட்டில்
ஊசி தேடுவதைப் போல...
நார் உரிக்க
கல்லை எடுத்தது போல...
ஏர் எடுத்த
முடவன் போல...
வார்த்தை வர
மறுத்தே தொலைத்தது...!
காற்றைக்கேட்டேன்
உதவி நில்லென்று...!
பார்த்துச் சிரித்து
ஏளனம் செய்தது...!
எங்கே போவேன்
வார்த்தை தேடி
எங்கே கிடைக்கும்
நற்றமிழ் பள்ளி
இங்கே வாழ்ந்தால்
இருப்பதும் மறக்கும்
வேண்டும் எனக்கோர்
மணித்திரு நாடு
ஆண்டும் அவையும்
தமிழே செய்யனும்..!
வாண்டும் வாழையும்
தமிழே பாடனும்...!
என்று நிறைவுறும்
நான் காணு சொற்பனம்..???
இன்றே உரைத்திடு
உறுதியாய் உரைத்திடு...!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக