கடல்...
பல நதிகளின்
சந்தோச சங்கமம்
நட்பு...
பல மனச் சுடர்களின்
சங்கம சந்தோசம்...
கடல் என்றுமே
எதிர்பார்த்ததில்லை
நதிகளின் குலாவலையோ...
அல்லது தழுவலையோ....!
நட்பும் அப்படித்தான்...
மனங்கள் உரசினாலும் சரி
மனங்கள் மணந்தாலும் சரி
மரணிக்காத சொந்தங்களின்
மறுக்காத உரசல்கள்....
அலைக்களின் ஆர்ப்பரிப்பும்
நட்பின் சிதறல்களும்
ஒன்றென்பேன்...!
அவை என்றுமே
தாமாக நிகழ்வதில்லை
காற்றின் உந்துதல்
அலைகளின் பிறப்பு என்றால்
காலத்தின் கட்டாயம்
நட்பின் சிதறலாகின்றது...
சுனாமிப் பேரலையாய்
கடல் வெடித்துத்
தெறித்தாலும்
மீண்டும் கடல் சேர்வதில்லையா...???
அப்படித்தான் - நட்பின் சிதறலும்
ஆனாலும் என்ன
சுனாமிக்குப் பின்னும்
உடைந்த உள்ளங்களுக்கு பின்னும்
ஏற்படும் வடுக்கள்
காலச் சக்கரம் எப்படிச்
சுழன்றாலும்....
சத்தியாமாய் அழிக்கமுடியாத
உண்மையின் வெளிப்பாடுகள்....!!!
சனி, 22 நவம்பர், 2008
அன்றொருநாள்...!
நகரம் எல்லாம் ஒளியிழந்து
மயக்கத்தில் தயங்கி நின்ற
மாலை ஒன்றில்..
கார்மேகம் புடைசூழ்ந்து
வான் மறைத்து நின்ற வேளை
வானமதோ பூமி தொலைத்து
தேம்பித் தேம்பி அழுதிருக்க
மின்னல் ஒளி அனுப்பி பூமி தேட
முனைப்பாய் முயன்ற வேளை
அருகேஒரு நிலவு வைத்து
விந்தைதனை இரசித்திருந்தேன்..!
மயக்கத்தில் தயங்கி நின்ற
மாலை ஒன்றில்..
கார்மேகம் புடைசூழ்ந்து
வான் மறைத்து நின்ற வேளை
வானமதோ பூமி தொலைத்து
தேம்பித் தேம்பி அழுதிருக்க
மின்னல் ஒளி அனுப்பி பூமி தேட
முனைப்பாய் முயன்ற வேளை
அருகேஒரு நிலவு வைத்து
விந்தைதனை இரசித்திருந்தேன்..!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
