செவ்வாய், 4 டிசம்பர், 2007

ஓர் காலைப் பொழுதின் என் மன ஓட்டம்...!

கிழிந்த இலைகள், முறிந்த மரங்கள்,
அணில் கொறித்த பழ்ங்கள்,
காய்ந்த செடிகள், கருகிய சருகுகள்,

காலைச் சூரியன், மாலைச் சந்திரன்,
இரவின் இருட்டு, பகலின் வெம்மை,
மழையின் வெள்ளம், காற்றின் வேகம்,
இப்படித்தான் வாழ்க்கை இன்றுவரை களிந்தது...!

வாழ்க்கைப் பூங்காவில் மொட்டென அரும்பி
பூவாய் மலர்ந்து என்றும் மணம் பரப்பும் ரோஜாவே...!
உன் வருகையின் பின் களிந்த வாழ்க்கையே
ஓர் புதினமானது....!

கிழிந்த இலைகளின் ஓவியச் செறிவுகள்,
உயிர்த்து எழும்பும் முறிமரத் துளிர்கள்,
மீதிப் பழம் தின்ன மண் கொண்ட உயிர்கள்,
எருவாகி மகிழும் செடிகள், சருகுகள்

என் தனிமை களையும் சந்திர நங்கை,
கண் சிமிட்டி நகைக்கும் நட்சத்திரர்,
ஒளிர்கை கொண்டு வானவில்லின் கண்
வண்ணமெடுத்தடிக்கும் பகலோன்...!

விளையாட்டுக் கப்பலுக்காய் சிறுமழை...
ஏழையவர் வயிறு நிறைக்க பருவமழை...
புயலும் கூட உனைத் தாண்டி,
வருடி வருகையில் தென்றலாகும் விந்தை...

ஆதாமின் வெற்றியில் ஏவாளுக்கும்
பங்குண்டாம் - என் மாற்றத்தின்
மாறுதலில் உன்பங்கு ஏதடி...?
எல்லைகள் தாண்டிய உன்னிதழ் புன்னகையோ....?

கருத்துகள் இல்லை: