தினம் தினம் கைதியாகி...
தமிழ் கூட மறந்துவிட
மணிக்கு ஒர் கவிதை செய்தோன்...
ஆண்டுக்கொன்று சமைக்கவந்தேன்....!
அன்றைய நாட்கள்...!
பேனா எடுத்து
காகிதம் தாங்கினால்
சும்மா வந்து கொட்டும்
அன்னைத்தமிழ்...!!!
அதுவும் மாலை நேர
மழை நாளில், கடற்கரை
ஓரம் என்றால்
சொல்லவும் தேவையில்லை
இக்கட்டடப் பெருங்காட்டில்
மென்பொருட் கலைஞனாக
என்று வீழ்ந்தேனோ - அன்று
மறந்தது இந்த தமிழும் அதனுடன்
சேர்ந்து பாழாய்ப்போன கவிதையும்...
எதனை நாள் தான்
அந்நிய மொழியை சுவாசிப்பது...?
எவ்வளவு தான் வேகமாய்
மூச்சுவிட்டாலும்
உடனேயே முட்டுகின்றது - மூச்சு
தினம் ஒருமுறையாவது
தமிழ் காற்றுத்தாருங்கள்...
சுத்தமாய் சுவாசித்து
நீண்டநாள் ஆகிவிட்டது...!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக