மற்றுமோர் காலை
புலர்ந்துகொண்டிருக்கிறது
ஐப்பசி 17ந் திகதி அதிகாலை 3.29
யாருக்குத்தெரியும்
எத்தனை இராணுவம்
வீதிமறித்து நிற்கின்றதோ...!
யாருக்குத்தெரியும்
எந்தத் தெருக்கோடியில்
குண்டு வெடிக்குமோ...!
யாருக்குத்தெரியும்
பட்டினியாய் இருக்கும்
அனைவருக்கும் ஒர் கவளை
உணவு கிடைக்குமோ...!
நான் இங்கு...
பென்டியம் கணணி...
ரகுமான் பாடல்
சொகுசுக் கதிரை
மின்விசிறி வாழ்க்கையில்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக