சனி, 22 நவம்பர், 2008

நட்பு

கடல்...
பல நதிகளின்
சந்தோச சங்கமம்

நட்பு...
பல மனச் சுடர்களின்
சங்கம சந்தோசம்...

கடல் என்றுமே
எதிர்பார்த்ததில்லை
நதிகளின் குலாவலையோ...
அல்லது தழுவலையோ....!

நட்பும் அப்படித்தான்...
மனங்கள் உரசினாலும் சரி
மனங்கள் மணந்தாலும் சரி
மரணிக்காத சொந்தங்களின்
மறுக்காத உரசல்கள்....

அலைக்களின் ஆர்ப்பரிப்பும்
நட்பின் சிதறல்களும்
ஒன்றென்பேன்...!

அவை என்றுமே
தாமாக நிகழ்வதில்லை

காற்றின் உந்துதல்
அலைகளின் பிறப்பு என்றால்
காலத்தின் கட்டாயம்
நட்பின் சிதறலாகின்றது...

சுனாமிப் பேரலையாய்
கடல் வெடித்துத்
தெறித்தாலும்
மீண்டும் கடல் சேர்வதில்லையா...???
அப்படித்தான் - நட்பின் சிதறலும்

ஆனாலும் என்ன
சுனாமிக்குப் பின்னும்
உடைந்த உள்ளங்களுக்கு பின்னும்
ஏற்படும் வடுக்கள்
காலச் சக்கரம் எப்படிச்
சுழன்றாலும்....
சத்தியாமாய் அழிக்கமுடியாத
உண்மையின் வெளிப்பாடுகள்....!!!

1 கருத்து:

த.அகிலன் சொன்னது…

//கடல் என்றுமே
எதிர்பார்த்ததில்லை
நதிகளின் குலாவலையோ...
அல்லது தழுவலையோ...//

கவிதை வந்திரும் தொடர்ந்து எழுதுங்க..