என் அன்புத் தோழுமைகளே...
பலமுறை அழத்துடித்தும் என்
பேனா என்னால் அடக்கப்பட்டிருந்தது....!
இன்று....,
உடைக்கப்பட்ட அணைக்கட்டின்
ஊற்றுயிராய், என்னையும்
உடைத்து கசிகின்றது....!
இதோ என் பேனாவில்...
சிந்தப்பட்ட உதிரத்துளிகளில் சில....!
என் முகத்தில் அவ்வப்போது
கீறல்களாய் வெளிப்படும்
புன்னகையின் அர்த்தம்
வினவுவீர்களே...
காவோலை விழக் குருத்தோலை
சிரிக்கும் சிரிப்புத்தன் அது....
தவறாக எண்ணாதீர்கள்...
உங்கள் வயதெல்லாம் நானறியேன்...
உங்கள் கண்களில் நான்
பார்த்த அனுபவத் திட்டுக்களை
வைத்தே என்னைக் குருத்தோலை என்றேன்...
தற்செயலான சந்திப்புகளில்
அகமகிழ்ந்தவன் நான்....!
இன்று த்விர்க்க முடியாத பிரிவுகளிலும்
புன்னகைக்க எண்ணுகின்றேன்...
குருதோலையாய் அல்ல....
காவோலையாய்..., இருந்தும்
கணணீர் மடல்களை உடைக்கின்றது....
நேசக்கரங்கள் விலங்கிடப்பட்டதை
எண்ணி வருந்தாதீர்.... நம்
இதயச் சாவிகள் அவிழ்த்தெறியும்....!
சமிபாடு அடையாத வலிகளை
எண்ணி வருந்தாதீர்.....
எப்பொழுதெல்லாம் முகங்கள்
மலர்கின்றதோ அப்போதெல்லாம்
சமிபாட்டு மாத்திரைகள் உற்பத்தியாகும்...
எப்பொழுதெல்லாம் உங்கள்
கால்கள் இடறுகின்றனவோ...
அப்போதெல்லாம் நானில்லை
என்றாலும் என் இதயம்
உங்களைத் தாங்கும்....!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

1 கருத்து:
mmmm...something different
கருத்துரையிடுக